'கும்' இருட்டில் சிக்கித்தவிக்கும் பந்தைய சாலை சிறுவர் பூங்கா : நடவடிக்கையை எதிர்நோக்கும் குழந்தைகள்

கோவை மாநகரில் சூழல் பிரச்சனைகளே இல்லாத ஒரு ரம்யமான இடம் ரேஸ்கோர்ஸ். அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கியப்புள்ளிகள் வாழும் பகுதி இது. இப்பகுதியில் அமைந்துள்ள மண்டல நீதித்துறை பயிலகம் அருகே சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது.



ஊஞ்சல், சறுக்கி விளையாட்டு, சீ-சா போன்ற குழந்தைகளின் விருப்ப விளையாட்டுகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அருகில் இருக்கும் அரசு குடியிருப்பு மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், சிறுவர்கள் மாலை நேரத்தில் இந்த பூங்காவில் பொழுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.

கும் இருட்டு

பொதுவாக மாலை நேரத்தில் குழந்தைகள் அதிக அளவில் இந்த பூங்காவிற்கு வருகின்றனர். இந்த சூழலில் பூங்காவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மின்விளக்கு எரியாமல் இருள் படர்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் பூங்காவிற்குள் ஒரு நபர் இருந்தால் கூட அது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத அளவிற்கு கும் இருட்டு.



இருந்த போதும், பெற்றோர்களுடன் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் அங்கு விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இவ்வாறு, இருள் படர்ந்த பூங்கா குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.

மேலும், மதிய வேளையில் பூங்கா-விற்குள் யாரும் நுழையக்கூடாது என்பதற்காக பூங்காவை சுற்றிலும் வேலியமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த வேலியும் பழுதடைந்துள்ளது.

கோவையின் மத்திய பகுதியில், அதுவும் அரசு அதிகாரிகளின் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் இது போன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...