டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொது சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-



மழை காலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுதல் மற்றும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு முந்தைய ஆண்டு மழைகாலங்களில் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டது போலவே, இனி வரும் காலங்களிலும் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வே;ண்டும். நீண்டநாட்களாக தண்ணீர் தேக்கி வைக்காத வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். மேலும் குடியிறுப்பவர்களுக்கு தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமதிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளித்தல் வேண்டும்.

டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்துதல் வேண்டும். பொது மக்களிடத்தில் சுகாதாரக் கல்வி அளித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலுடன் வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மேலும், டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டால் உடனடியாக துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், உயர் சிகிச்சை வழங்கிட ஏதுவாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கோ, அல்லது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே பரிந்துரைத்திட வேண்டும். மழைகாலங்களில் மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மிகுந்த சிரத்தையுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

பொதுமக்களும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், சுற்றுப்புறத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் யாருக்கேனும் தொடர் காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறி ஏற்படுமாயின் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கோ, அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கோ தகவல் அளித்தல் வேண்டும். மேலும் வீட்டிற்கு ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) பத்மாவதி, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...