மணல் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான அமைப்புகளின் கூட்டு குழுவினர் பேரணி

மணல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வஉசி மைதானம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு குழுவினர் இன்று பேரணி நடத்தினர்.



மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று ஒருநாள் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பினர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வஉசி மைதானம் வரை பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர்.



அப்போது கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு பேசுகையில், அரசு மணல் குவாரிகளில் போதியளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்துள்ளது. எம்.சாண்ட் மணல் போதியளவு கிடைக்கவில்லை. மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...