நீலகிரியில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்க கருத்தரங்கம்

நீலகிரி மாவட்டம், உதகை கலாச்சார பண்பாட்டு மையத்தில் வணிகவரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மற்றும் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டு, வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-

"ஜிஎஸ்டி குறித்த பொதுமக்களின் சந்தேகங்களையும், வணிக பெருமக்களின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் விதமாக இக்கருத்தரங்கம் துவங்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கினை பயன்படுத்தி பொதுமக்களும், வணிக பெருமக்களும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஜிஎஸ்டி குறித்து வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அச்சமடையவும் தேவையில்லை.

ஜிஎஸ்டி என்பது இதுவரை நாம் நேரடியாக வரியும், மறைமுகமாக பல வரியும் செலுத்தி வருகிறோம். இதையெல்லாம் ஒன்றிணைத்து, எளிமையாக கொண்டு வரப்பட்டதுதான் இந்த ஜிஎஸ்டி. நாட்டின் முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நல்ல திட்டம்தான் இது. இதனால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

வாட் வரியிலிருந்து ஜிஎஸ்டிக்கு பதிவு மாற்றம் செய்த வணிகர்கள் தற்காலிக பதிவு எண் மூலம் 3 மாதம் வரை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமும் ஜிஎஸ்டி பதிவுச் சான்று வழங்கப்படும். முழுமையாக உள்ள பதிவு விண்ணப்பத்திற்கு 3 வேலை நாட்களுக்குள் பதிவுச் சான்று வழங்கப்படும். 15 இலக்கம் கொண்ட ஜிஎஸ்டி எண் வழங்கப்படும். பதிவுச் சான்று பெறுவதற்கு பான் எண் அவசியம். பதிவு கட்டணம் இல்லை. ஆண்டு விற்பனை தொகை 20 லட்சத்திற்கு கீழ் இருந்தால் அவர்கள் ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்ய அவசியமில்லை.

சரக்கு மற்றும் சேவை வழங்குபவர் மற்றும் பெறுவபவரின் பெயர், முகவரி ஜிஎஸ்டிஐஎன் எண், தொடர்ச்சியான வரிசை எண் மற்றும் தேதி, எச்எஸ்என் குறியீட்டு எண், பொருள், சேவையின் விலை மற்றும் வரி விகிதம் ஆகியவைகளை பதிவு பெற்ற வணிகர் விலைப்பட்டியல் வழங்கும் போது கடைபிடிக்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரிகளை இணையவழி மூலமும், கடன் அட்டை, பற்று அட்டை, என்இஎப்டி, ஆர்டிஜிஎனு ஆகியவைகளின் மூலம் செலுத்தலாம். செலுத்தும் வரியானது மின்னணு பண பேரேட்டில் தானாகவே வரவு வைக்கப்படும். ஆண்டு விற்பனை தொகை ரூ.75 லட்சத்திற்குகீழ் உள்ள வணிகர்கள் 0.5 சதவிகிதம் வரியும், உற்பத்தியாளர்கள் 1.0 சதவிகிதம் வரியும், உணவகங்கள் 2.5 சதவிகிதம் வரியும் செலுத்தினால் போதும். விற்பனை பட்டியல் விவரம் தாக்கல் செய்ய தேவையில்லை.

இக்கருத்தரங்கில் கோவை கோட்ட இணை ஆணையர் செயலாக்கம் எஸ்.பிஅம்ரீத், நீலகிரி வணிகவரி துணை ஆணையர் சி.மணிமோகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...