ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மரம்நடு விழா

கோவைப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரம் நடு விழாவும், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியும் நடத்தப் பெற்றன. மரம் நடுதல் வாரத்தின் இறுதி நாளினை முன்னிட்டுக் கல்லூரியின் மைதானத்தைச் சுற்றிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் களப் பணியாளர்கள் மரம் நடுதலைத் தொடங்கினர். 

இதனை முன்னிட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து ‘வனதேவதை’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தியது. போட்டியில் மிகுதியான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் வி.இராதிகா மரம் நடுதலைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் க.பாலாஜி மரம் நடுதலிலும் இலக்கியப் போட்டியிலும் கலந்து கொண்டவர்களைச் சிறப்பித்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...