கோஷ்டி மோதலில் இந்து முன்னணியின் நிர்வாகி படுகாயம்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை ஆலந்துரையை அடுத்த பூலுவபட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலிபால் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து நண்பர்களின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டுள்ளது.

அப்போது சிவா (50) என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவா-வின் மகன் சுரேந்திர குமார் (25) தனது நண்பரும், இந்து முன்னணியின் மாநகர மாவட்ட செயலாளருமான ரமேஷ் குமார் (29) என்பவருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ் குமார் அப்பகுதியைச் சேர்ந்த சுமன் (34) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மரக்கட்டையால் ரமேஷ்குமார் பலமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். 

தகவலறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதில் சுமனும் படுகாயமடைந்தார். தொடர்ந்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...