பேருந்தை சுத்தப்படுத்திய ஊழியர் உடல் நசுங்கி பலி

கோவை தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (35). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனையில், பேருந்துகளை சுத்தப்படுத்தும் பணி செய்து வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று இரவு பணிக்கு சென்ற குமார் பணிமனையில் நிறுத்தி வைத்திருக்கும் பேருந்துகளை சுத்தம் செய்து வந்தார். இன்று அதிகாலை பேருந்து ஒன்றின் பின்புற கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார்.

இதை அறியாத பேருந்தின் ஓட்டுநர் ஏசுகுமார் (39) பேருந்தை பின்புறமாக இயக்கினார். இதனால், பேருந்தின் பின்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்த குமார், உடல் நசுங்கி பலியானார்.

இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...