ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் திருடுவதை தடுக்காவிட்டால் குடும்ப அட்டை திருப்பி அளிக்கப்படும்- ஆட்சியரிடம் மக்கள் புகார்


பணப்பாளையம்புதூரில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டையை திருப்பி அளிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பணப்பாளையம்புதூர், செம்மனாம்பாளையம் மற்றும் அருகில் வசித்து வரும் 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளியங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறோம். அத்திகடவு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரை இந்த பகுதி மக்கள் உபயோகித்து வந்தோம். தற்போது தாங்கள் வசித்து வரும் பகுதியின் அருகே சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதால் மேற்குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தங்களது குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.



இதேபோல் தண்ணீர் திருட்டால் விவசாயம் அழிந்து வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...