தண்ணீர் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் சலவை தொழிலாளர்கள் மனு

தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இடையர் வீதி கன்னட வன்னார் சந்து பகுதி சலவை தொழில் செய்து வரும் மக்கள் கூறியதாவது :-

தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கபட்ட டோபிகானாவில் 50-ம் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைக்க பெறாத காரணத்தால் சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி தொகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். 

எனவே, தாங்கள் பணி செய்து வரும் டோபிகானா அருகே போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலை சீராகும் வரை தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...