வீட்டிலிருந்த நொருக்குத் தீணிகளை தின்றுவிட்டு ஹாயாக பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேட்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரகுமார். இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உடையாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் நொருக்குத் தீணிகளை கொள்ளை அடித்தவர்கள்  சாவுகாசமாக அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பின் குழந்தையின் பள்ளி புத்தக பையில் வைத்து திருடிய நகை, பணம், லேப்டாப் போன்றவற்றை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு ராஜேந்திர குமார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணம், லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...