வீட்டுமனை பட்டா கேட்டு சாட்டையடித்தபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாடோடிகள்

கோவை காந்திபார்க் பகுதியில் சாட்டையடித்து பிழைப்பு நடத்தும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் சாலையோரம் வசித்து வருகின்றனர்.



இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாட்பாரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வரும் நிலையில் தாங்கள் குடிசை அமைத்து வாழ ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர்.



இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு குடும்பம் சகிதமாக வந்தவர்கள் நுழைவுவாயில் முன்பு சாட்டை அடித்து ஆடி உடனடியாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். பெண்கள் குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ மறைவிடம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்து இருப்பிடத்திற்கு வழி செய்து தர வேண்டும். 

மேலும் தங்களுடைய வருங்கால சந்ததிகள் தாங்கள் செய்து வரும் சாட்டியடியை கைவிட்டு கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். தங்களது சமூகத்தில் முன்னோடியாக ஒரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது அரசு தேர்விற்கு பயின்று வருகிறார். தங்களுடைய சமூகம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள நிலையில் பிளாட்பாரங்களில் தங்குவதால் மற்றவர்கள் தங்களை ஏளனமாக பார்ப்பது வேதனையளிக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...