வாகன ஓட்டிகளுக்கு வலுக்கும் கட்டுப்பாடுகள்...!

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அனைத்து செயலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கும் கோவை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சாலைப் பாதுகாப்பு குழுவினரால் நிர்ணயிக்கப்பட் வேக அளவை விட அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சமிக்கையை மதிக்காமல் வாகனத்தை இயக்குதல், சரக்கு வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதல் சுமையை ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை போக்குவரத்து ஆணையர், கோவையில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

  • அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்தல்.
  • தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினை விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக வழங்குதல்.
  • பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலமாக செயலாக்க பணியினை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.


அதன்படி, இன்றைய தினம் முதற்கட்டமாக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களிலும் இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படும் என கோவை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...