ஊரக பகுதிகளில் சுகாதாரத்தினை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் பருவமழை காலம் தொடங்கியதையடுத்து எல்லையோர கிராமங்கள் மற்றும் அனைத்து ஊரகப்பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் களஆய்வு மேற்கொண்டு வருகின்றார். 

அதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சி 31வது வார்டு பகுதிகளான தென்னியப்பன் கோவில் வீதி, எம்.ஜி.ஆர். கலனி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் நாயக்கன்பாளையம், வடுகபாளையம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன்களத்தூர், செல்லாண்டி கவுண்டன்புதூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் எல்லையோர கிராமகங்களிலும், மாவட்டத்தின் பிற ஊரகப்பகுதிகளிலும் சுகாதார சீற்கேடு ஏற்படக்கூடாத வகையில் சுழன்று பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தபட்டுள்ளது.



அவ்வப்போது ஊராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உயர் அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் மாவட்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதரப்பணிகளை திடீர் களஆய்வின் மூலம் கண்காகித்து வருகின்றனர். தூய்மைப்பணியாளர்களும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வரும் பகுதிகளில் மட்டும் பணிகளை மேற்கொள்ளாமல், அனைத்து பகுதிகளிலும் கவனமுடன் பணிமேற்கொள்ள வேண்டும்.



சரிவர பணியாற்றாத அல்லது புகார் வரும் பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் புறவெளிகளில் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று தண்ணீர் தேக்கிவைத்துள்ள தொட்டிகள், பிரிட்ஜில் உள்ள தண்ணீர் சேமிப்பான், வாளி போன்றவற்றினை சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

நீண்டநாட்களாக கண்டிப்பாக தண்ணீர் சேமித்து வைக்ககூடாது அது சுகாதார சீர்கேட்டிற்கே(கொசு உற்பத்தியாகவே) வழிவகுக்கும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தூய்மை பணி மேற்கொள்ள வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வட்டார சுகாதார அலுவலர்கள் ஊரக பகுதிகளை தேர்வு செய்து சுழற்சி அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், நிலவேம்பு கசாயம், பப்பாளி இளைச்சாறு போன்றவற்றினை வழங்குதல் வேண்டும். ஏதேனும் நோய் தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட அரசு மருத்துமனைக்கு பரிந்துறை செய்து முறையாக கண்கானிக்க வேண்டும். மேலும், அவர்களின் இருப்பிடப்பகுதிகளில் ஆய்வு செய்து நோய்காரணிகளை முற்றிலும் அழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளை சுகாதாரமாக வைப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதாரக் கல்வியினை பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடையே கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எல்லையோர கிராமங்களை தொடர்ந்து கண்கானித்து, நமது மாவட்டத்தின் எல்லையில் சுகாதார சீர்கேடு ஏற்படுமாயின் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தங்களது உயர் அலுவலர் வாயிலாக தெரிவித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இவ்வாய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், வட்டாட்சியர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பொதுசுகாரதாரத்துறை அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...