தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கொசுவினால் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டது. 

மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை முற்றிலுமாக தடுத்து காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், பொது மக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...