டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மேற்படி காய்ச்சல் பாதிப்பினை தடுத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பூரண ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பினை முழுமையாக ஒழிக்க முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதில், மக்கள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காவண்ணம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் கொசுக்கள் உற்பத்தி செய்திட ஏதுவாக உள்ள டயர்கள், உரல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் தொட்டிகள், உபயோகமற்ற பொருட்கள், பேப்பர் கப்கள் போன்ற பொருட்களை உடன் நீர் தேங்காச்செய்யாமல் செய்வதுடன் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டினை தூய்மையாக வைத்திடல் வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் குடிநீரை சுத்தப்படுத்தி மூடி கொசு புகாதவாறு வைக்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் நீர் தேங்கி இருப்பதை உடனுக்குடன் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும்போது உடனிருந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு அரம்ப சுகாதார நிலையம் மற்றும் தலைமை அரசுமருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.

மாடிகளில் சின்டெக்ஸ் பயன்படுத்தும் வீடுகளில் தொட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நீர் நிரம்பி வெளியேறும் குழாய்களிலும் ஏர் வால்வுகளிலும் கொசுக்கள் உள்ளே புகாதவாறு கொசுவலை துண்டினை கட்டப்படல் வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...