பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதம்

பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று கோவை சிவானந்தா காலனியில் நடைபெறுகிறது. இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் பிசியோதெரபி கல்வி தொடங்கப்பட்டு 64 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதும் பிசியோதெரபி மருத்துவ கல்வியை நெறிப்படுத்த மத்தியிலோ, மாநிலத்திலோ பிசியோதெரபி கவுன்சில் இதுவரை அமைக்கப்படவில்லை.

டெல்லி, மாகாராஸ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மாநில அளவிலான பிசியோதெரபி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2009 ஆண்டே சட்டமன்ற கூட்டத்தொடரில் பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கபடவில்லை.

இதனால் நாளுக்கு நாள் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருகிறது. போலி பிசியோதெரபி மருத்துவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களால் பொது மக்களின் உடல் நலம் கேள்விக் குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதேப்போல், கவுன்சில் இல்லாததால் முறையாக மருத்துவ பட்டம் பெற்ற பிசியோதெரபி மருத்துவர்கள் அரசு பதிவு பெற்ற மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதால் பொது மக்களால் போலி பிசியோதெரபி மருத்துவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் என்ற முறையில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தமிழக மக்கள் தொகைக்கு அரசு சார்பில் 134 பிசியோதெரபி மருத்துவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிசியோதெரபி மருத்துவம் சென்றடைய முடியாத நிலை உள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பிசியோதெரபி கவுன்சில் ஒன்று தான் தீர்வாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.

இதில் பிசியோதெரபி மருத்துவர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...