நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்பப்படும்- துணை சபாநாயர் தம்பி துரை



நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் எனவும், தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பி துரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், சசிகலா, தினகரன் ஆகியோர் லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் தொடர்ச்சியாக வருவது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சிகள் லஞ்சப்புகார்கள் தெரிவித்து அரசியல் செய்கின்றன எனவும் இதை அரசியல் ரீதியாக அதிமுக  எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நீட் பிரச்சனைக்கு காரணம் திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே. தற்போது அந்த இரு கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது. 

தமிழகத்திற்கு தேவையான பொறியியல், மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் எடுத்துச் செல்ல முயல்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தமிழகம் முனிசிபாலிட்டியாக மாறக கூடாது. மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன.

நீட் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று விட்டதால் மத்திய அரசை அதிமுக-வால் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் குரல் எழுப்பப்படும். தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும். 

அதிமுக-வில் ஓரே அணிதான் இருக்கிறது. பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் கமல் அரசியலுக்கு வந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆட்சியில் தவறுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும். அதிமுக மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறது, மற்ற கட்சிகளுக்கு பயப்படாது". இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...