'அக்ரி இன்டெக்ஸ் - 2017' வேளாண் கண்காட்சியில் புல்தரையை அழகுபடுத்தும் ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் அறிமுகம்

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் 'அக்ரி இண்டெக் 2017' என்ற விவசாய கண்காட்சியில் புல்தரையை அழகுபடுத்தும் ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கம் எனும், கொடிசியா சார்பில், 'அக்ரி இன்டெக்ஸ் - 2017' எனும் விவசாயக் கண்காட்சி, கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை  துவங்கியது. கண்காட்சியை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி துவக்கி வைத்தார். இக்கண்காட்சி காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. விடுமுறை நாளன இன்று பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. இக்கண்காட்சியில், இந்தியா மட்டுமின்றி, இத்தாலி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட, 12 நாடுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் அரங்குகள் அமைந்துள்ளன. இதில், வேளாண் இயந்திரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் என, பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இக்கண்காட்சியில் பல்வேறு கருவிகள் மற்றும் இயற்கை உரங்கள் போன்றவற்ற விவசாயிகளுக்கு சம்மந்தமானவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார்:



இந்தியாவில் முதல்முறையாக ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் அறிமுகபடுத்தப்படவுள்ளது. இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் வீடுகளில் வெளிப்புறத்தில் உள்ள கார்டனில் அதிக அளவில் வளர்ந்த புல்களை இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் மூலம் வெட்டிவேடுக்கப்படுகிறது. 2 செ.மீ முதல் 3செ.மீ வரை புல்தரையினை அழகுபடுத்த இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் பயன்படுகிறது. 45 டிகிரி வரையிலான மேடுகளில் இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் ஏறும் வகையிலும், தானியங்கி மூலமாக ரீசார்ஜ் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.

செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர்:







தொலைவில் உள்ள மின் மோட்டரை இருக்கின்ற இடத்திலிருந்தே செல்போன் மூலம் ஆன்/ ஆப் செய்திடும் கருவியாக செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் சிறப்பம்சமாக மிஸ்ட் கால் மற்றும் குறுந்தகவல் மூலமாகவும், மோட்டரை ஆன்/ ஆப்  செய்து கொள்ளலாம். இதனால் உயர் மற்றும் குறைந்த மின் அழுத்தத்தில் இருந்து மோட்டார் பாதுகாக்கபடுகிறது. தண்ணீர் தீர்ந்தவுடன் மோட்டார் தானாகவே ஆப் செய்யப்படுகிறது. மின்சாரத்தில் கோளாறுகள் இருப்பின் மோட்டார் ஆப் செய்யப்படுகிறது. மின்சார தடை மற்றும் நேரடியாக மோட்டார் ஆன்/ ஆப் செய்யப்படும் பொழுது குறுந்தகவல் மூலம் தகவலை அறிந்து கொள்ளலாம். இதனை 0.5 hp முதல்  50 hp வரையிலான மோட்டர்களில் பொருதிக் கொள்ளலாம்.

உணவு கழிவுலிருந்து தயாரிக்கப்படும் பயோ-காஸ்:







தினசரி நமது இல்லங்களில் மீதமாகும் சாப்பாடு - காய்கறிகள் - பழங்கள் - மாமிசங்கள் போன்ற அனைத்து கழிவுகளையும் கொண்டு பயோ-மேதணிசேசன் என்ற முறையில் பயோ-காஸ் உருவாக்கபடுகிறது. இதை எல்.பி.ஜி. -ஐ போன்று சமையல் எரிவாயுவாக உபயோகிக்க முடியும். தினசரி எல்.பி.ஜி. உபயோகத்தை  குறைப்பதுடன் பணமும் மீதமாகிறது, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்கமுடிகிறது...! மேலும், இதன் சிறப்பம்சங்கள்: மாதந்திர எல்.பி.ஜி. உபயோகத்தில் 100% வரை சேமிக்கலாம். வீட்டின் மாடியிலோ, பக்கவாட்டிலோ வைத்துக்கொள்ளலாம். பராமரிப்பு இல்லாத உபகரணம். எவ்வித துர்நாற்றமும் இருக்காது. மிகவும் பாதுகாப்பனது. நாள் ஒன்றுக்கு 3-4 மணிநேரம் பயன்படுத்தலாம். ஹோட்டல், காலேஜ், தொழிற்சாலை கேண்டீன்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து செய்து தரப்படும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...