டெங்குவால் தொடரும் உயிர் பலி: திருப்பூரைச் சேர்ந்த சிறுவன் மரணம்


கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக் கூடிய இந்த காய்ச்சல் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், டெங்குவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (10). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் இரத்த மாதிரிகளை எடுத்த மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரவீனுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதியன்று பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இந்த மரணத்திற்கு காரணம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...