அரசின் வருமானத்திற்கு புதிய டாஸ்மாக்- மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டிய மக்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த வாரம் புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.



ஏற்கனவே இயங்கி வந்த மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதை அகற்ற கோரியுள்ள நிலையில் புதிதாக கடை திறந்ததைக் கண்டித்தும், அரசின் வருமானத்திற்கான புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும்  இன்று பூங்கொத்து கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களைத் தடுத்த காவலர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த பூங்கொத்தை பறிமுதல் செய்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...