குடிநீர் வழங்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும், குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் அன்னூர் எம்ஜிசி பாளையம் பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், எம்ஜிசி பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணி துவங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உடனடியாக திட்டப் பணியினை துவங்க வேண்டும்.

மேலும், குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதுமான அளவு குடிநீர் விநியோகிப்பது இல்லை. இதுகுறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பிற கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் பெற்றுவரவேண்டியுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்னூர் பகுதீ மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...