சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு நாடகம்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இமேஜ் மைன்ட்ஸ் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.



குன்னூர் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, வளிமண்டலம் ஆகியவை மாசுபடுத்துதல் குறித்தும் மேலும் இவைகளை சீர்ப்படுத்த மரங்கள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள் வீதி நாடகம் நடத்தி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த விழிப்புணர்வு நாடகத்தில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படுவதையும் மாணவர்கள் தங்களின் அற்புதமான நடிப்பால் வெளிப்படுதியது மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...