தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் சிறந்த பணி செய்த துப்புரவுப் பணியாளருக்கு தங்க நாணயம்

கோவை மாநகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக உலர் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பிரதிவாரம் புதன்கிழமை தோறும் 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கும் திட்டத்தில் சிறந்த பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சிறந்த பணி செய்ததற்காக 100-வது வார்டு சிட்கோ பேஸ் இரண்டில் துப்புரவுப் பணியாளர் பழனியம்மாளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆணையர் கோ.பிரகாஷ் பணியை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...