குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வெங்கய்யா நாயுடு

குடியரசு துணைத் தலைவர் போட்டி வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வரும் வெங்கய்யா நாயுடு-வை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த வெங்கய்யா நாயுடு கடந்த 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தார். 

கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்பை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை வெளியிட்டார். 

வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சரியானவர் என்றும், நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் செய்தியாளர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.

வெங்கய்யா நாயுடுவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...