நீலகிரியில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 136 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டு அதன்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 136 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கெத்தை மின்வாரியத்தில் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கீழ்குந்தா கிராமம் குந்தா வட்டத்தை சேர்ந்த குணசேகரின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) முருகன், தனித்துணை ஆட்சியர் மனுக்கள் கார்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...