அடிப்படை வசதி கேட்டவர்களை விரட்டியடித்தது போலீஸ் : 'வீடு வரும் ஆனா வராது' அலட்சிய குரல் கொடுக்கும் அதிகாரிகள்

கோவை காந்திபார்க் பகுதியில் சாடையடித்து வாழ்க்கை நடத்தும் மக்கள் ஃப்ளாட் பாரங்களில் தங்கியுள்ளனர். 

கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த இடம் தடாகம் சாலையில் உள்ளது.

தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்றும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என்றும் அப்பகுதியில் வாழும் மக்கள் சிம்ப்ளிசிட்டி வாயிலாக தெரிவித்தனர்.



இது தொடர்பாக, அம்மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அபாயமான சூழலில் குழந்தைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் வீடியோ மூலமாக காட்சிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், இன்று மாலை அப்பகுதிக்கு வந்த போலீசார், அம்மக்களை உடனடியாக இடத்தை காலி செய்ய வலியுறுத்தினர். 



சிறிது அவகாசம் கூட கொடுக்கமால், இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் நடவடிக்கை எடுப்போம் என்றும் விரட்டியடித்தனர். 

போலீசாருடன், அரசு அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்று மக்களை அங்கிருந்து அகற்றுவதில் மும்முரமாய் இருந்தனர். ஆனால், அவர்கள் எங்கு சென்று தங்குவது என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை. 

அதிகாரிகளின் அச்சுறுத்தலினால், தங்குமிடத்தை தேடி தற்போது அனாதைகளாக சாலையில் அலைகின்றனர் அம்மக்கள்.

இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

இந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீடு வேண்டி மனு அளித்துள்ளனர். அதன்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அவர்களுக்கு உக்கடம் பஸ்டிப்போ முன்புறம் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது.



இந்த அறிவிப்பை தொடர்ந்து, மக்களிடம் பெயர் மற்றும் பிற விபரங்களை பெற்றுவிட்டோம். 

தனித்தனியே ஒதுக்கப்பட்ட வீடு குடிசை மாற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு கையெழுத்திற்காக சென்றுள்ளது.

ஆனால், ஒரு பிரச்சனை உள்ளது. வீடு ஒதுக்கப்படும் போது டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். அதை யார் செலுத்துவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

வீடு ஒதுக்கப்பட்ட பின்னர், ஃப்ளாட் பாரத்தில் வாழும் மக்களை அந்தந்த வீட்டுக்கு அனுப்ப வழிவகை செய்வது முறையான செயல். ஆனால், சம்மந்தப்பட்ட இடத்தில் இருந்து அம்மக்களை விரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனும், கால அவகாசமே இன்றி மக்களை விரட்டியடிக்கும் பாணியில் போலீசார் நடந்து கொண்டது சாட்டையடித்து வாழும் மக்களின் முதுகினில் சாட்டையடியாய் விழுந்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...