கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஈரானிய மாணவர்கள் புகார்

கோவையில் மருத்துவ படிப்பிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அதனை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மீது ஈரானிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை திருச்சி சாலை கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்விக் குழுமங்களுக்கு சொந்தமான பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், ஈரான் நாட்டு மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சுமார் 20 கோடி ரூபாய் வரை தங்களிடம் பல் மருத்துவ படிப்பிற்காக ஆர்விஎஸ் கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொண்டது. ஆனால் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்துள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தங்களை நீக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தங்களது பணத்தை திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், நிர்வாகம் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்".

இவ்வாறு அந்த மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...