அத்திக்கடவு- அவினாசி திட்டம்: போராடிய மக்களுக்கு பயனற்றதாக மாற்றும் முதலமைச்சரின் புதிய திட்டம்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை அமல்படுத்தக் கோரி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பல்வேறு வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றி அறிவித்திருப்பது போராடிவரும் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் மாநில சட்டசபைக் கூட்டத் தொடரின் போது அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என அறிவித்தார். இதில், இத்திட்டம் 2017 டிசம்பரில் தொடங்கி அடுத்த 30 மாதங்களில் முடிவடையும் எனவும் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர். இருப்பினும், முதலமைச்சர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை மாற்றி அறிவித்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றினார்கள் என்ற சந்தேகம் இருந்தாலும் கோவையின் அன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இதில் இணைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் மூன்று நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை அன்னூர், காலிங்கராயன் பாளையம் மற்றும் ஈராடு பெருந்துறையில் அமைக்கப்படவுள்ளன. இந்த மூன்று நீர் உந்து நிலையங்கள் இடையே பல்வேறு கிராமங்களில் நீர் பயணிக்கும். அதில் இருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு செல்லும் நீரானது அன்னூருக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லாமலேயே திட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் பரிசீலனை செய்து திட்டத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார் பி.கே.செல்வராஜ் எனும் சமூக ஆர்வலர்.

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தினை எதிர்பார்த்து இருந்த கிராமவாசிகளுக்கு நீர் வழங்கப்படாமல் திட்டத்தை மாற்றியது மிகப்பெரும் அநீதியாகும். இத்திட்டத்தினை மாற்றி அமைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக தமிழக முதலமைச்சருக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...