ஆர்எஸ்.புரம் பகுதியில் தவறவிடப்பட்ட 60 பவுன் நகையை காவல் ஆணையரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட 60 பவுன் தங்க நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் ஒப்படைத்தார்.



கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். கடந்த 20 வருடங்களாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்றுகாலை சவாரி செல்லும் போது, முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தில் இருந்தவரின் பை ஒன்று தவறி விழுந்தததை கண்ட முனியப்பன் அந்த பையை எடுத்து பார்த்த போது அதனுள் தங்க நகைகள் மற்றும் தங்க காசுகள் இருந்துள்ளன.

இதனையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்களிடன் கூறியுள்ளார். பின்னர் அந்த பையை எடுத்து சென்று மாநகர காவல் ஆணையாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் முனியப்பன் ஒப்படைத்தார்.

பையினுள் இருந்த நகையை மதிப்பீடு செய்த போது 60 பவுன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே நகையை தவறவிட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தநிலையில் அவரிடம் தவறவிட்ட நகைகளை போலீசார் ஒப்படைத்தனர்.

ஆட்டோ ஓடுநரின் நேர்மையை பாராட்டிய மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், அவரின் நேர்மைக்கு பரிசாக தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...