செட்டிப்பாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கோவை போத்தனூர் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இரயில்கள் சேவை துவங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போத்தனூர் - பொள்ளாச்சி இரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிபாளையம் பகுதியில் இரயில் நிலையம் அமைக்க இரயில்வே துறை அனுமதி அளித்த நிலையில், இதற்காக பேரூராட்சி நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினரும் 49 லட்ச ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...