தொண்டாமுத்தூரில் அரசு கலைக் கல்லூரி துவக்கம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்கிறார்.



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் கலைக் கல்லூரி துவங்க முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வருகின்ற ஞாயிறன்று (ஜூலை 6) புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்,

தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) துவக்கப்படவுள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ. (ஆங்கிலம்), பி.காம் (சிஏ), பி.காம் (பிஏ), பி.ஏ.வணிகவியல், பிஎஸ்சி கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர், ஆகியோர் வாழ்த்துறை வழங்கவும், அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

எனவே, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும், மேலும், இந்த கல்வி ஆண்டிலேயே, தானியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்திகி, உதவி இயக்குநர்கள் கணேஷ்ராம், (பேரூராட்சிகள்), பத்மாவதி, (ஊராட்சிகள்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...