கோவையில் மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் கைது



கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் புதூரில் ஸ்ரீ முருகன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஒரு சித்த மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு மருத்துவம் பயிலாமல் ஒரு பெண்மணி நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, லதா (63) என்ற பெண் சித்த மருத்துவம் டிப்ளமோ பயின்று விட்டு, ஆங்கில மருத்துவ வழியில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோமங்கலம் காவல்துறையினர் லதாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...