ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பாதாள சாக்கடையை இணைக்க உத்தரவு

கோவை, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு சுற்றுவட்டார பகுதியில் 1,500 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கழிவு நீர் சாலையில் செல்லாமல் இருக்கவும், குளத்தில் கலக்காமலும், வடிகாலில் மழை நீர் மட்டுமே செல்லும் வகையில் கட்டுமானம் செய்ய வேண்டும். அத்தகைய ஏற்பாடு செய்யும்போது கொசு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் பழைய மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கோவையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹோப் காலேஜ் முதல் சிங்காநல்லுார் வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் அல்வேர்னியா கான்வென்ட் முதல் ஒண்டிப்புதூர் வரை, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.5.25 கோடி செலுத்த வேண்டும். மாநகராட்சியில் நிதி இல்லாததால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என திருத்திய மதிப்பீடு தயாரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தற்போது, உக்கடத்தில் கட்டுமான பணி முடிந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஒண்டிப்புதூரில் நாளொன்றுக்கு 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுள்ள மையம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது.

ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் முடிந்து விட்டதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழலில் எந்தெந்த பகுதிகளில் இணைப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என பொறியியல் பிரிவினருடன் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மையத்தின் சுற்றுவட்டார பகுதியில் 1,500 இணைப்புகள் வழங்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...