நீலகிரி வின்டேஜ் கார் சங்கம் சார்பில் 13-வது ஆண்டு பழங்கால கார் அணிவகுப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த பழங்கால கார்களின் அணிவகுப்பில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார்கள் கூட கம்பீரமாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தன.



நீலகிரி மாவட்டம், வின்டேஜ் கார் சங்கம் சார்பில் 13-வது ஆண்டு பழங்கால கார் அணிவகுப்பு உதகையில் நடந்தது. உதகை தமிழகம் மாளிகை சாலையில் துவங்கிய அணிவகுப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த கார்கள் அணிவகுப்பில் கன்னியாகுமரியில் இருந்து ஓட்டி வரப்பட்ட டாட்ஜ் பிரதர்ஸ் வாகனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இது 1931-யில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இக்காலத்து கேரவன் வாகனம் போன்று அந்த வாகனத்தில் அமர, உறங்க, ஓய்வெடுக்க என பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நீலகிரி மாவட்ட வின்டேஜ் கார் சங்கத் தலைவர் ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், "முந்தைய ஆண்டுகளில் பழங்கால கார்களை வீடுகளின் வாசலில் கவுரவத்திற்காக நிறுத்தி வைக்கும் நிலை தற்போது மாறி இருக்கிறது. கன்னியாகுமரி, கேரளா, காரைக்குடி, பெங்களூருவில் இருந்து கூட பழங்கால வாகனங்களை அதன் உரிமையாளர்கள் ஓட்டி வந்துள்ளனர். இந்த பழங்கால கார்களின் மவுசு அதிகரித்தி உள்ளது" என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...