ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியன்று ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரயில்வே காவல்துறையின் சார்பில் பாராட்டும், வெகுமதியும் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 12695) சரோஜா எனும் பயணி கடந்த ஜூலை 9ம் தேதியன்று பயணித்துள்ளார். அப்போது, அந்த ரயிலில் 12 பவுன் நகை, பான், ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவற்றை சரோஜா தவரவிட்டுள்ளார்.

இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து, காவலர் செந்தில் குமார் அவரை துரத்திச் சென்ற நிலையில் ரயில் நிலையத்தின் முன்பு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த நபரை வழிமறித்து பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்பத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த வாலிபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும், ஐடி படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு உள்ளது என்னும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் ஆணையின் பெயரில் ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாயினை ரயில்வேத் துறை டிஎஸ்பி குணசேகரன் வழங்கினார். மேலும், காவலர் செந்தில்குமாருக்கு 3 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முன்னதாக, ரயிலில் நகை மற்றும் கைபேசியை தவறவிட்ட சரோஜா ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...