மக்காத குப்பை சேகரிப்பு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.5.24 லட்சம் ஊக்கத் தொகை


கோவையில் நூறு சதவிகிதம் தரம் பிரித்து குப்பை சேகரிப்பதற்கான பணிகள் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரத்தில் ஆறு நாட்கள் மக்காத குப்பை சேகரிப்பு, புதன்கிழமை மட்டும் மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய மக்காத குப்பை சேகரிக்கும் திட்டம் ஜூன், 21ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், ஜூன் மாதம் முதல் கோவை மாநகரில் 100 வார்டில் அனைத்து பகுதிகளிலும் வாரத்திற்க்கு ஒரு நாள் மட்டுமென ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மக்கும் குப்பை சேகரிக்கப்படும்.

இதன் முயற்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் சுலபமாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்ற புதன்கிழமை மட்டும், 209.77 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டது. அவற்றை விற்று வந்த தொகையில், 5.24 லட்சம் ரூபாய் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டது.

மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களை சில தனியார் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. அந்நிறுவனத்தினர் கொடுக்கும் தொகை, தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதனால், 209.77 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டதில் ரூ. 5.24 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 15.32 டன், மேற்கு - 62, வடக்கு - 25.45, தெற்கு - 27.4, மத்திய மண்டலம் - 79.6 டன் சேகரமானது. கடந்த ஏழு வாரங்களில் 1,005.86 டன் குப்பை சேகரமாகி உள்ளது. 18.45 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இனி வரும் நாட்களில், 300 டன் மக்காத குப்பை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் 'ஸ்பான்சர்' உதவியுடன் தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது' என்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...