கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி 249 ராணுவ வீரர்கள் அனுமதி : 51 பேருக்கு டெங்கு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி 249 ராணுவ வீரர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

டெங்கு காய்ச்சல் பீதி தமிழக மக்களை உலுக்கி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில், ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த 51 ராணுவ வீரர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், 198 வீரர்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...