தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டம்

கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில், விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்ததது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளுக்கிடையேயான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. மக்கள் சேவை மையம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 40 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்தனர். 

இளைஞர்கள் மத்தியில் கைத்தறி புடவைக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளாரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் மாவட்டந்தோறும் நூல் வங்கிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,கைத்தறியினை ஊக்குவிக்க நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், கைத்தறி தொழிலாளர்களின் நிலை மற்றும் கைத்தறி புடவைகளின்  மதிப்பு குறித்து இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அவர்,யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் பிரபல நடிகர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு  அரசியலில் நுழைவது  தவறு என குறிப்பிட்டவர் அரசியல் கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரிலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அரசியல் தலைவர்களாகி உள்ளனர் என தெரிவித்த அவர், உடனடியாக நடிகர் ரஜினியோ அல்லது கமல்ஹாசனோ அரசியலுக்கு வந்தால் அவர்களை தலைவராக  ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

இந்த போட்டிகளில பங்கேற்று  முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...