சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை விமானங்களின் கண்காட்சி

கோவையை அடுத்த சூலூரில் இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது. விமானங்களின் பழுது நீக்கம் மற்றும் விமானிகளுக்கான பயிற்சிகள் இத்தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த தளத்திற்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.



ஆனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வருடத்திற்கு ஒருமுறை சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான கண்காட்சி இன்று ஒருநாள் நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் விமானங்கள், ரேடார் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் துருவ் ஹெலிகாப்டரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சூலூர் விமானப்படையின் சாரங் பிரிவை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்ததோடு குட்டிக்கரணம் அடித்து சாகசங்கள் நிகழ்த்திய காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



இதையடுத்து ஆண்டனோவ் வகையை சேர்ந்த பயணிகள் மற்றும் சரக்கு விமானம் வானத்தில் வட்டமடித்ததை கண்ட பார்வையாளர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். பொதுவாக இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போர்க்காலங்களில் மட்டுமல்லாது இயற்கை பேரிடர்களின் போது பல்வேறு மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தது மாணவ மாணவிகளிடையே வரவேற்பை பெற்றது.



கண்காட்சியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டார்னியர், ஆண்டனோவ், எம்.கே-1 வகை விமானங்கள் மற்றும் துருவ், எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் போர்க்காலங்களில் மட்டுமல்லாது அமைதி காலங்களில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



கண்காட்சியை பார்வையிட்ட மாணவ மாணவிகள் முதல்முறையாக இந்திய விமானப்படை போர்விமானங்களை பார்வையிட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் விமானப்படையில் இணைய வேண்டும் என்ற தங்களது ஆர்வத்தை இக்கண்காட்சி அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...