நீலகிரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பொதுநல சேவை சங்கத்தினர் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட காவல்துறை மற்றும் சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பு இணைந்து குன்னூர் க்ளப்பில் அனைத்து பொதுநல சேவை சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குன்னூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், குன்னூர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன், சிட்டிஸன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகி ஜெபரத்தினம், மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி உசேன், குன்னூர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் உமர், டேனி, லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு கலந்துரையாடல் நடத்தினர்.



இந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகன ஓட்டுனர்களின் வாகன நிறுத்தப் பிரச்சனைகள் பற்றி உரையாற்றப்பட்டது. மேலும் "மல்டி லெவல் பார்கிங்" அமைத்தலின் நன்மைகள் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைவிதிகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...