பள்ளி பருவத்தில், தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் - பொள்ளாச்சி சார் ஆட்சியர்

தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டமும், பொள்ளாச்சி லிபர்ட்டி அரிமா சங்கமும் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் ஸ்லோகம் எழுதும் போட்டிகளை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் கடந்த ஜூன் 22ம் தேதியன்று நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 10ம் தேதியன்று பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மின்னல் மஹாலில் சார் ஆட்சியர் காயத்திரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் வரவேற்றார்.



அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோக் சண்முக சுந்தரம், அரிமா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிபர்ட்டி அரிமா சங்க தலைவர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் பேசும் போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி கற்பதற்கான நல்ல சூழல் மற்றும் அரசின் சலுகைகள் அதிகமாக வழங்கப்படுகிறது. நல்ல வசதியான தரமான பள்ளி கட்டிடங்கள், நூலகம், சுற்றுச்சூழல், நல்ல முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைத்துள்ளது மாணவ மாணவிகளுக்கு நல்ல வாய்ப்பாகும்.

பள்ளிப் பருவத்தில் தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் செயல்பட்டு கல்வி கற்றால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

வாழ்வில் நிகழக்கூடிய பல்வேறு செயல்களுக்கு நாம் மற்றவர்களை முன்னிறுத்தி காட்டுகிறோம். அப்படி இல்லாமல் ஒவ்வொரு செயலுக்கும் நாம் தான் காரணம் என்பதை உணர வேண்டும் என சார் ஆட்சியர் பேசினார்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 900-மாணவ மாணவிகள், ஆசியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஓவியங்களை பார்வையிட்ட சார் ஆட்சியர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். நிறைவாக தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் பீஜு அலெக்ஸ் நன்றி கூறினார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...