கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில் சேவைகள் 11.08.2017 மற்றும் 12.08.2017 ஆகிய தேதிகளில் சோதனை ஓட்டம் இயக்க, சேலம் பிரிவு, தெற்கு ரயில்வே பொறியியல் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக கோயம்புத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 2 பெட்டிகள் மற்றும் ஒரு ஜென்ரேட்டார் பெட்டி கொண்டு கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, 80கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. அப்போது பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது எந்த முக்கிய பிரச்சினையும் ஏற்படவில்லை என பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த சோதனை ஓட்டத்தின் போது பொறியாளர்கள் எம் பிரபாகரன், நல்லமுத்து,மாணிக்கம், மாரியப்பன், மற்றும் எம் பூபதிராஜா ஆகியோர் இருந்தனர். 

இது குறித்து டிஆர்எம் சேலம், தெற்கு ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மா கூறுகையில், கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மேலும், டபுள் டக்கர் ரயில் மற்ற எட்டு பெட்டிகள் மற்றும் 2 ஜென்ரேட்டார் பெட்டிகள் தலைமையகத்தில் இருந்து விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றார். அனைத்து பெட்டிகளும் வந்த பின்னர் 100 கிமீ வேகத்தில் பொறியாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் உதவி மூலம் இயக்கப்படும் என்றார். அதன் பின் விரைவில் கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...