சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி

வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் 271 தியாகிகளின் புகைப்படங்கள் உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சிகள் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்கு திருக்குறள் மாமன்றம் மற்றும் மூத்த தொழிநுட்ப அலுவலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.



இது குறித்து வ.உ.சி சேவா அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து கூறுகையில், மூன்றுநாள் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் அரியவகை புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புகைப்படங்கள் இணையதளங்களில் எளிதில் கிடைப்பதில்லை. திருப்பூர் மற்றும் கோயமுத்தூரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளை தேடி இவ்வகை புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளோம். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பார்வையிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.



இதில் வ.உ.சி சேவா அறக்கட்டளை துணைத் தலைவர் ஆனந்த், செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் வ.உ.சி சேவா அறக்கட்டளை முக்கிய செயற்குழு உருப்பினர்கள் மற்றும் கிராமிய கலைகள் ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், ஈர நெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....