பொள்ளாச்சியில் பாரதியார் பல்கலை கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சமத்தூர் இராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலை பள்ளியில் பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைச்சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மானியத்துடன் தென்னைக்கன்று, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வீ.சி.ஆறுகுட்டி, எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் (பொ) கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...