இந்தியாவில் இரண்டு சதவிகிதம் மக்களே உடல் உறுப்புகளை தானம் பெறுகின்றனர்- கிஃப்ட் அன் ஆர்கன் திட்ட தலைவர் தகவல்

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காத்திருந்தாலும், அவர்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே நன்கொடையாக உடல் உறுப்புகளை பெற முடிகின்றது என்று சங்கரா கண் மருத்துவமனை நிறுவனரும் கிஃப்ட் அன் ஆர்கன் திட்டத்தின் தலைவருமான மருத்துவர் ஆர்.வி.ரமணி தெரிவித்துள்ளார்.



உறுப்பு நன்கொடை தானம் குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ஆர்.வி.ரமணி, உடல் உறுப்பு தேவைகள் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், 5550 நோயாளிகள் மட்டுமே தற்போது உறுப்புகளை தானமாக பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், உறுப்பு தானம் குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது பாராட்டக்குறியது. "கடந்த ஆண்டு மட்டும் 648 உறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.



சிஐஐ கோயம்புத்தூர் மற்றும் ஜெம் மருத்துவமனை பாரியாட்ரிக் கன்சல்டன்ட் மருத்துவர் பி.பிரவீன் ராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மருத்துவமனைகள் உட்பட 13 மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

இதனைத்தொர்ந்து 'கிஃப்ட்டிங் லைப்' என்னும் கருத்தில் நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆர்.சிவக்குமார் பேசுகையில், தங்கள் உறுப்புகளை நன்கொடையாக வழங்குவதைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று கூறினார். காந்தி மற்றும் காமராஜர் உட்பட பல அறிஞர்கள் நாட்டிற்காக தங்களது வாழ்வையே பரிசாக அளித்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பேசுகையில், நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேவை அதிகரித்துள்ளது. மக்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்படும் என்றார்.



Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....