உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் அஞ்சலி


உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கததால், அந்நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த ஆக்சிஜனை நிறுத்தியது. இதனால் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலைaயில் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அஞ்சலி  செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு தரமில்லை என பாஜகவினர் கூறி வரும் நிலையில்,பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததாலேயே குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...