71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்



நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



இதைதொடர்ந்து, காவல்துறை மற்றும் மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டர்.



பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் 12 பேருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



மேலும், பள்ளிக் கல்வி துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் துறை, வருவாய் துறை உட்பட 12 துறைதள் சார்பில் 549 பயனாளிகளுக்கு 14 கோடியே 99 லட்சத்து 45 ஆயிரத்து 254 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளையும் ஹரிஹரன் வழங்கினார்.



இதையடுத்து நடைபெற்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆணையர் அ.அமல்ராஜ், காவல் துறைத்தலைவர் (மேற்கு மண்டலம்) பாரி, மாநகர காவல் துணை ஆணையர் பி.எ.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் தேசபற்றாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...