கோவை மாநகராட்சி சார்பில் 71-வது சுதந்திர தின விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 71-வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) 71-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். 

முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



இவ்விழாவில் கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 14 பணியாளர்களுக்கு தலா ரூ.2,000 வெகுமதி தொகையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார். 



இவ்விழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களின் களரி விளையாட்டு மற்றும் பிற வீரசாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இவ்விழாவில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...