ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த தடியடி தொடர்பான விசாரணை முடிவடைய 7 மாதங்கள் ஆகும் - ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்



தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது.

இந்த சட்டம் கொண்டு வந்தும் மாணவர்கள் போராட்டம் நீடித்தது. தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி காலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மாணவர்கள் மீது நடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) கோவைக்கு வந்த விசாரணை கமிஷன் தலைவர் ராஜேஸ்வரன் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

சென்னை மெரினா கடற்கரை, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பொதுமக்களை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்தது. 

கடந்த ஜனவரி 1-ம் தேதி மூன்று மாத காலக்கெடுவுக்குள் விசாரணை முடிக்க ஆணை கிடைத்தது. ஆனால், விசாரணை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் விசாரணை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கலவரம் தொடர்பாக 1949 பேர் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவையில் 51 பேரிடம் விசாரணை நடைபெற உள்ளது. 

இந்த 51 பேரில் 29 பேர் போலீசாருக்கு ஆதரவாக பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 15 பேர் போலீசாருக்கு எதிராகவும், 7 போலீசாரும் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விசாரணை முடித்த பின்னர் மீண்டும் அடுத்த கட்டமாக மீதமுள்ள 31 பேரிடம் விசாரணை நடைபெறும். 

சென்னையில் ஆட்டோக்கள் மற்றும் குடிசைகள் கொளுத்தப்பட்ட புகாரில் பலர் போலீசாருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தப்படும்.



விசாரணை கமிஷன் எந்த அதிகாரிகளை அழைத்தாலும் அவர் உடனடியாக வர வேண்டும். இந்த விசாரணை முழுவதுமாக  முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...