'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் இனியாவது செயல்முறைக்கு வருமா? மாநகராட்சியில் புதிய நிர்வாகி பதவியேற்பு

தமிழக அரசு நிறுவனமான கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் 2017-18ஆம் ஆண்டிற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தகுதியுடையவர்கள் காலி பணியிடங்களான தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, சிஎஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி அன்று கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை நிர்வாக அதிகாரியாக, ஆர்.சுகன்யா நியமிக்கப்பட்டார். மத்திய, மாநில அரசுகளிடம் நிதியைப் பெற்று, இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் பெரும் பொறுப்பில், கோவை மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. 

இத்திட்டத்தில், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களை மேம்படுத்துவது, நகருக்குள் மாதிரிச் சாலைகள் அமைப்பது, நடை மேம்பாலங்கள் அமைப்பது என பல்வேறு பணிகளையும், மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. எதுவுமே செயல் வடிவம் பெறுவதாகத் தெரியவில்லை. இன்னும் இத்திட்டம் இழுத்துக் கொண்டிருக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பே, இத்திட்டத்துக்காக கோவை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இப்போது தான், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கான தலைமை செயல் அலுவலர் (சி.இ.ஓ.,) நியமனம் நடந்துள்ளது. அந்த நியமனமும், கோவை மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இத்திட்டத்தில், அரசியல் தலையீடு எதுவுமே இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெளிவாக அறிவுறுத்தியுள்ள நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., பிரமுகருமான கே.பி.ராஜூவின் மகளான ஆர்.சுகன்யா இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பதே, இந்த அதிர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் காரணம். மத்திய அரசின் விதிமுறைகளின்படி, இந்தப் பணியிடத்துக்கு 10 ஆண்டுகள் அனுபவம் கோரப்பட்டிருந்தது; ஊதியம் 2 லட்ச ரூபாய் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இவரை நியமிக்க வேண்டுமென்பதற்காகவே, மூன்று ஆண்டு அனுபவம் என்றும், ஒரு லட்ச ரூபாய் ஊதியமென்றும் நியமன விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, அந்த திருத்தத்துக்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் என்பதால், அனுபவசாலிகளை தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டுமென்றே 65 வயது வரையிலானவர்களை இந்த பணியில் நியமிக்கலாம் என மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. 

ஆனால், திட்டமிட்டே விதிமுறைகளை மாற்றி, எந்த பெரிய நிறுவனத்திலும் பெரிய பொறுப்புகளில் அனுபவமில்லாத 30 வயதுக்குக் குறைவான ஒருவரை நியமித்துள்ளனர். இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வந்தபோது, 21 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 17 பேர் மட்டுமே, நேர்காணலுக்கு வந்திருந்தனர். தற்போது பணி நியமனம் நடந்துள்ளது. இதிலிருந்தே, கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், ஆளுங்கட்சியினரின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், நகரத்திற்கு மாபெரும் பொக்கிஷமாகக் கிடைத்துள்ள ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, அனுபவமும், திறமையும் உள்ள ஒருவரை நியமிக்காமல், அரசியல் தலையீட்டுடன் பணி நியமனம் செய்திருப்பது, நகர் நலனில் அக்கறை கொண்டோரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...